துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் சங்க தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் போட்டியின்றி ஒருமனதாக புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் எம்.நடராஜன் சங்க தலைவராகவும்,சி.சரவணன் சங்க செயலாளராகவும்,சி.ரவீந்திரன் சங்கப் பொருளாளராகவும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து புதிய சங்க நிர்வாகிகளுக்கு வழக்கறிஞர்கள் மற்றும் குமாஸ்தாக்கள் மற்றும் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.