திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபு
9715328420
தாராபுரம் அருகே கலைமாமணி விருது பெற்ற கலைஞர் கலாராணியின் அருந்ததியர் பெண்ணின் ஐந்து ஏக்கர் நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் வெள்ளகோயில் நகைக்கடை தொழிலதிபர் மீது நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள கௌசிங் யூனிட் பகுதியில் வசித்து வருபவர் கலைமாமணி கலாராணி(வயது54) இவருக்கு சொந்தமான பூர்வீக நிலம் 5-சென்ட் தாராபுரம்-காங்கேயம் சாலையில் கன்னாங்கோவில்- குள்ளாய்பாளையம் என்ற கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாய்க்கால் மேடு என்ற இடத்தில் உள்ளது. இந்த நிலத்தை கலாராணியின் அப்பா உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது மருத்துவச் செலவிற்காக சேலத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் இடத்தில் தனது 5 சென்ட் நிலத்தில் 3. 75 சென்ட் நிலத்தை கடனாக வைத்து 9. லட்சம் ரூபாய் அடமான கிரையம் வைத்து பணம் பெற்று வந்துள்ளார். அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு தான் பெற்ற ரூபாய் 9-லட்சம் கடன் தொகை அதற்கு உண்டான வட்டித்தொகை உடன் சேர்த்து கொடுப்பதாக சுப்பிரமணியம் இடம் கலாராணி தெரிவித்துள்ளார்.
ஆனால் ஒன்பது லட்சத்திற்கு கடனாக நிலத்தை பெற்ற சொத்தில் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் கோடி என்பதால் சுப்பிரமணி கலா ராணிக்கு இடத்தினை திருப்பி தர மறுத்து நாட்களை இழுத்து வந்துள்ளார்.
தற்போது
வெள்ளகோவில் சேர்ந்த நகை வியாபாரி நடராஜன் மூலம் முத்துக்குமார் என்பவருக்கு சுப்பிரமணி கலாராணிக்கு தெரியாமலேயே கிரயம் கொடுத்துள்ளனர். அதன் பிறகு முத்துக்குமாரின் மனைவி கலையரசிக்கு தானாகரயமாக இடம் மாற்றப்பட்டது. அதன் பிறகு கலையரசி மூன்று பேர்களுக்கு இடத்தை விற்பனை செய்வதாக செட்டில்மென்ட் கிரையம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது இந்த தகவல் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கலா ராணிக்கு தெரிய வரவே. கலாராணி ஐயா நீங்கள் கொடுத்த பணத்திற்கு வட்டியுடன் சேர்த்து பணம் கொடுத்து விடுகிறேன் ஏற்கனவே நான் பலமுறை உங்களுக்கு வட்டியுடன் சேர்த்து பணம் கொடுத்துள்ளேன்.
அந்த கணக்கை சரி பார்த்தால் போதும் நீங்கள் என்னை ஏமாற்றி ஆறு கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க பார்க்கிறீர்கள் என சுப்பிரமணியிடம் கலாராணி கண்ணீர் விட்டு கதறி கேட்கவே சுப்பிரமணி அருந்ததியர் பெண்ணான உனக்கு எதுக்கமா இவ்வளவு சொகுசு சொத்து எங்க சமூகத்தை கிட்ட நீ’ கடன் வாங்கிட்ட இல்ல அப்புறம் அந்த சொத்தை மறந்து விட வேண்டியதுதான் என உரத்த குரலில் தெரிவித்துள்ளார்.
சுப்பிரமணி அருந்ததியர் சமூகத்தினரின் பெயரில் உள்ள ஒரு நிலத்தினை மற்ற சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கிரையம் செய்ய முடியாது என்ற சட்ட நடைமுறை இருந்து வரும்போது இது போன்ற ஏமாற்று செயலில் ஈடுபட்ட சுப்பிரமணி மற்றும் வெள்ளகோவில் சேர்ந்த நடராஜன் கலையரசி ஆகியோர் மீது தகுந்த பிரிவுகளில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தன் நிலத்தை மீட்டு தர கோரி கேட்கச் சென்றபோது அவர்கள் தனது தலையைப் பிடித்து ஜாதியின் பெயரைச் சொல்லி திட்டியதாகவும் மேலும் களராணி அணிந்திருந்த ஜாக்கெட்டை சுப்பிரமணியனின் அடியாட்கள் கிழித்ததாகவும் கூறப்படுகிறது மேலும் கலாரணிக்கு இதய நோய் இருப்பதால் அவர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.
அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். கலா ராணியின் 5 சென்ட் நிலத்தை மீட்டு தர வேண்டும் என கலாராணி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் முத்தூரைச் சேர்ந்த செய்தித் துறை அமைச்சர் அமைச்சர் சாமிநாதன் அவர்களுக்கும் கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.