அலங்காநல்லூர்
மதுரை மேற்கு தெற்கு ஒன்றியத்தின் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி குமாரம் பகுதியில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தகூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், தலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினர் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சரும் திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார், கலந்துகொண்டு அதிமுக ஆட்சியில் நடைபெற்ற திட்டங்களை எடுத்துக் கூறினார்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு தையல் மிஷின்,குடும்பநிதி, உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர்கள் வெற்றிவேல், வக்கீல் திருப்பதி, வாடிப்பட்டி ராஜேஷ்கண்ணா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசன், கருப்பையா, மாணிக்கம், மகேந்திரன், சதன்பிரபாகரன், ஒன்றிய செயலாளர்கள் கல்லணை ரவிச்சந்திரன், வாடிப்பட்டி காளிதாஸ், கொரியர்கணேசன், ராமகிருஷ்ணன், மாவட்ட மகளிரணி செயலாளர் வக்கீல் லெட்சுமி, அம்மா பேரவை மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் மலர்கண்ணன், துணைத் தலைவர் ராகுல், நிர்வாகிகள் குமாரம்பாலன் குருசாமி, சிறுவாலை செல்வம், புதுப்பட்டி பாண்டுரங்கன் விவசாய அணி ஆர்.பி.குமார், முத்துகிருஷ்ணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.