காங்கயம், செய்தியாளர் பிரபு
செல் :9715328420
நிழலி கிராமத்தில் புதுநாட்ராயசுவாமி கோவிலில் தேர்த்திருவிழா
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அடுத்த கொடுவாய் என்.காஞ்சிபுரம் பகுதி நிழலி கிராமத்தில் அமைந்துள்ள புதுநாட்ராயசுவாமி கோவிலில் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி முதல் நேற்று மாலை வரை தேர்த்திருவிழா நடைபெற்றது.
மகா சிவராத்திரி மற்றும் தேர்த்திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். இதனை தொடர்ந்து இரவு 8 மணி அளவில் கொடி இறக்குதல் மற்றும் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்று விழா இனிதே நிறைவுற்றது.