தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு சத்தியமங்கலம் அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு, பேரூராட்சி தலைவர் மகேஸ்வரிசெந்தில்நாதன் அவர்கள் அடையாள அட்டை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் அரியப்பம்பாளையம் பேரூர் திமுக செயலாளர் வழக்கறிஞர் ஏ.எஸ்.செந்தில்நாதன், மாவட்ட பிரதிநிதி துரைசாமி,10வது வார்டு செயலாளர் முருகன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அடையாள அட்டை பெற்றுக்கொண்ட தூய்மை பணியாளர்கள், முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.