திருவாரூர் அருகே பெண்களுக்கான ஆன்மீக விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.. 1000-கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்..
திருவாரூர் அருகே பவித்ரமாணிக்கம் தனியார் திருமண மண்டபத்தில் பெண்களுக்கான சக்தி வரம் இன்னும் ஆன்மீக விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.. இந்த நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் ஸ்ரீ ஆஷ்ரிதா தாஷாஜி கலந்துகொண்டு ”சக்திவரம்” எனும் ஆன்மீக விழிப்புணர்வு பயிற்சி வகுப்பை நடத்தினார்.
இன்று காலை துவங்கி மாலை வரை நடைபெற்ற பயிற்சி வகுப்பில்…
நவீன உலகில் ஒரு பொறுப்பான தாயாகவும் அன்பான மனைவியாகவும்.. ஒரு நல்ல குடும்பத்தையும்.. ஒரு நல்ல சமுதாயத்தையும் உருவாக்குவது குறித்து பெண்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்.. ஒரு நாள் ஆன்மீக பயிற்சி அளிக்கப்பட்டது.இந்த நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்