துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பெருமாள்மலை அடிவாரம் கலைஞர் திடலில் துறையூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு வழிகாட்டுதல்படி திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் தலைமை தாங்கி பேசினார்.
கழக கொள்கை பரப்பு செயலாளர் சபாபதி மோகன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.துறையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவ சரவணன் அனைவரையும் வரவேற்று பேசினார். இக்கூட்டத்தில் எம்எல்ஏ ஸ்டாலின் குமார், மாவட்ட துணை செயலாளர்கள் சோபனபுரம் கனகராஜ்,மயில்வாகனன், முன்னாள் மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன் நகர செயலாளர் மெடிக்கல் முரளி ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை வீரபத்திரன் முத்துச்செல்வன் அசோகன், மாவட்ட கலை இலக்கிய பேரவை தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ் குமார், வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் நரேஷ் குமார், விவசாய அணி செல்லமுத்து, வர்த்தக அணி திருமூர்த்தி, சுற்று சூழல் அணி அம்மன் பாபு, நகரமன்ற தலைவர் செல்வராணி மலர் மன்னன் ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன் தாஸ், பொதுக்குழு உறுப்பினர் கிட்டப்பா, மாவட்ட அமைப்பாளர்கள் வழக்கறிஞர் ஜெயராஜ், மகளிர் அணி கிருபா ரவி, பூபதி,மு.மா.கவுன்சிலர் தமயந்திபிரபு,மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கீரம்பூர் முத்துதுரை,கிழக்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதிகள் செல்வகுமார், முருகேசன் ,ஒன்றிய பொருளாளர் நடுவலூர் ஜெயராமன், பேச்சாளர் துரை பாண்டியன், தொண்டரணி வழக்கறிஞர் யோகராஜ்,நகர நிர்வாகிகள் இளங்கோவன்,பிரபு, மதியழகன்,ரெங்கநாதபுரம் கார்த்திக், வழக்கறிஞர் முகமது ரபிக், தொமுச சுப்பையா, நகர் மன்ற உறுப்பினர் மணிகண்டன்,ம.ஒ.து.செ.அன்புகாந்தி, மெடிக்கல் பிரேம்குமார், ,மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இக்கூட்டத்தில் 2026 ல் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கவும், இரு மொழி கொள்கையை வலியுறுத்தியும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. கூட்ட நிறைவில் அடிவாரம் திமுக கிளைச் செயலாளர் டி இராமசாமி நண்டு உரையாற்றினார்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்