கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.
பல்லடம் அருகே பணப்பாளையம் பகுதியில் ஹிட்டாச்சி ஏடிஎம் இயந்திரத்தை மர்ம நபர் ஒருவர் காலால் உதைத்து உடைக்கும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பணப் பாளையம் பகுதியில் ஹிட்டாச்சி ஏடிஎம் இயந்திரம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த ஏடிஎம் இயந்திரத்திற்கு பணம் எடுக்க வந்த நபர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை சேதமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அருகில் இருப்பவர்களிடம் கூறியுள்ளார். தொடர்ந்து சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அங்கு சென்ற பல்லடம் டிஎஸ்பி சுரேஷ் தலைமையிலான போலீசார் இயந்திரம் சேதம் அடைந்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பது போல வந்து ஏடிஎம் இயந்திரத்தை காலால் எட்டி உதைப்பது போலவும் வெளியில் கிடந்த கல்லை எடுத்து வந்து ஏடிஎம் இயந்திரத்தை தாக்கியுள்ளது போல சிசிடிவி காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பூ கேமராவில் பதிவாகி இருந்தது மேலும் அந்த நபர் தொடர்பான சிசி டிவி காட்சிகள் தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது