பிரபு தாராபுரம்செய்தியாளர்
செல்:9715328420
தாராபுரத்தில் விட்டு விட்டு கனமழை விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்!
குடிநீர் தட்டுப்பாடு நீங்க மழை போதுமானதாக இருக்கும் என பொதுமக்கள் தெரிவித்தனர்…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்,சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தாராபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியுற்று வந்தனர். மேலும் கடும் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தாராபுரம், குண்டடம், மூலனூர் வட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணி முதல் இரவு 11 மணி வரை மணி வரை விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது கடும் வெயில் மற்றும் கடும் வறட்சியால் விவசாய பயிர்கள் காய்ந்து வந்த நிலையில் இந்த மழையின் மூலம் மீண்டும் உயிர் பெற்றுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
நள்ளிரவு 11 மணியளவில் இடி மின்னலுடன் பலத்த காற்று வீசியது. சிறிது நேரத்தில் துவங்கிய மழை படிப்படியாக அதிகரித்து மின் விநியோகம் தடைபட்டு மீண்டும் சீரடைந்தது. இந்த கோடை மழையால் வெப்பநிலை சற்று குறைந்தது. சின்னக் கடைவீதி, என்.ஜி.ஓ. காலனி, சங்கர் ரைஸ்மில், அரசமரம், போன்ற பகுதிகளில் பள்ளமான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.கடும் வெப்பத்துக்கு ஆறுதலாகப் பெய்த இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.