தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கம்பம் புதுப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அன்னபூரணி அம்பாள் சமேத அருள்மிகு ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் கோவிலுக்கு செல்ல பக்தர்கள் வசதிக்காக கோவிலுக்கும் செல்லும் பாதையாக வண்டிப் பாதையில் அமைக்க கம்பம் புதுப்பட்டி நிலக்கி ழார்கள் கே கோபால் டி.வி சிவாஜி மோகன் ஆகியோருக்கு பாத்தியப்பட்ட சுமார் ஒரு ஏக்கர் புன் செய் நிலத்தை தானமாக கொடுத்து அதை கவர்னருக்கு பத்திரம் பதிந்து கொடுத்தும் அந்த பத்திரத்தை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் கம்பம் என். ராமகிருஷ்ணன் மூலமாக பத்திரத்தை கம்பம் புதுப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சா. இளங்கோவன் பேரூராட்சி மன்றத் தலைவர் சுந்தரி பாஸ்கரன் ஆகியோரிடம் வழங்கப்பட்டது
இந்த நிகழ்வில் பேரூர் திமுக செயலாளர் எம் டி எம் பார்த்திபன் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பசுபதி குமார் தொழிலதிபர் கே எம் பி எல் ரவி மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் உடன் இருந்தனர்.