தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் பேரூராட்சிக்கு அம்ரூத் குடிதண்ணீர் திட்டத்தை பேரூராட்சி நிர்வாகம் முறையாக செய்து சுண்ணாம்பு தண்ணீர் உள்ள உமயங்கால் பகுதியில் கிணறு அமைப்பதை கைவிட்டு, சுத்தமான குடிதண்ணீர் உள்ள இடங்களில் கிணறுகள் அமைக்க வலியுறுத்தி தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
இதில் அமமுக தங்கம், முகமது கனி ஜலீல், ஜக்கிய கம்யூனிஸ்ட் முத்துசாமி, சிபிஐஎம்எல் பேச்சி முத்து, கம்யூனிஸ்ட் தம்பிதுரை, திமுக துரையப்பா, ரஜாசலீம், மமக அகமது அலி ரஜாய், பீர்மைதீன், தமுமுக முகைதீன் அப்துல்காதிர், விசிக முருகையா, காங்கிரஸ் அனீஸ், நாகூர்கனி, இந்திய கம்யூனிஸ்ட் சம்சுதீன், தொழிற்சங்கம் முருகையா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இறுதியாக மமக மகுதண்ணன் நன்றியுரை கூறினார்.