திருவெற்றியூர்
சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம், நேற்று காலை, தி.மு.க., மண்டல குழு தலைவர் தி.மு. தனியரசு தலைமையில் நடந்தது.
இதில், மண்டல உதவி கமிஷனர் விஜய்பாபு, செயற்பொறியாளர் பாபு, மண்டல நல அலுவலர் லீனா உள்ளிட்ட அதிகாரி கள் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், 94 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அடிப்படை வசதிகள் மற்றும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து, கவுன்சிலர்கள் பேசினர்.
தி.மு. தனியரசு, தி.மு.க., மண்டல குழு தலைவர் பேசியதாவது :
துாய்மை பணி மேற்கொள்ள, கூடுதலாக, 350 பணியாளர்கள் வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நகராட்சியாக இருக்கும் போது, 15 குடிநீர் லாரிகள் இருந்தது. தற்போது, மண்டலத்திற்கே நான்கு லாரிகள் போதுமா னதல்ல. என்.டி.ஓ., குப்பம் – ஒண்டிகுப்பம் வரை, இரண்டாம் கட்டமாக கடற்கரை அழகுபடுத்தும் திட்டம் நடக்கவிரு க்கிறது. 9.70 கோடி செலவில், பட்டினத்தார் சுடுகாடு புனரமைக்கப்பட உள்ளது. வார்டின் பணிகள் குறித்து, கவுன்சில ர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.