தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர் ரயிலடியில், தஞ்சை மத்திய மாவட்ட மாநகர திமுக இளைஞரணி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் தலைமையேற்றார்.
இக்கூட்டத்தில் கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் மற்றும் முன்னாள் நிதி துறை இணை அமைச்சர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம், தஞ்சை எம்.பி ச.முரசொலி, தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், தஞ்சை மாநகர செயலாளர் மற்றும் மேயர் சண்.ராமநாதன் மத்திய மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் க.முகில் வேந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி துணை செயலாளர் நா.இளையராஜா கழக கொள்கை பரப்புச் செயலாளர் சபாபதி மோகன், இளம் பேச்சாளர் ரகுநாத் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். தஞ்சை மாநகர அமைப்பாளர் வாசிம் ராஜா அனைவரையும் வரவேற்றார். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் எஸ்.ஆர்.எஸ்.செந்தமிழ் செல்வன் நன்றி உரையாற்றினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட துணை அமைப்பாளர்கள் சி.ஏ.சுரேஷ், ராஜேஷ் கண்ணா, எம்.எஸ்.வெங்கடேசன், கார்த்திக், இ.எஸ்.உதயநிதி, மாநகரத் துணை அமைப்பாளர்கள் தஞ்சை எஸ்.பிரபு, மதிபாலன், திருஞானம், எஸ்பி.சதீஷ் பிரசாந்த். தஞ்சை கிழக்கு ஒன்றிய அமைப்பாளர் ஜெயபாண்டியன், இளைஞர் அமைப்பாளர் ஞானசேகரன் ஆகியோர் இக்கூட்டத்தினை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.