சத்தியமங்கலம்
தாளவாடியில் புகழ்பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடைபெற்றது.
தாளவாடியில் புகழ்பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா உற்சாகமாக நடைபெற்றது. மசூதி, ராமர் கோவில், மாரியம்மன் கோவில் என மூன்று கோவில்களும் ஒரே இடத்தில் அமைந்திருப்பது தாளவாடியின் சிறப்பம்சம் ஆகும். மசூதி முன்பு மத நல்லிணக்கத்தோடு மூன்று நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் இரவு 9 மணிக்கு அம்மன் கோவிலில் இருந்து சகல மேல வாத்தியங்களுடன் ஆற்றிற்கு சென்று அம்மனுக்கு அபிஷேக ஆராதனை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பின்னர் அம்மன் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு கோவிலில் உள்ள இடத்தில் அம்மனுக்கு மலர் ஊஞ்சல் அலங்கரிக்கப்பட்டது. இதில் குண்டம் இறங்குவதற்காக தாளவாடி பகுதியில் இருந்து சுமார் 40க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் இருந்து மரங்கள் வெட்டி எடுக்கப்பட்டு வந்து கோவில், மசூதி முன்பு குண்டத்துக்காக அமைக்கப்பட்டிருந்தது.
இதில் வருடம் தோறும் முதல் மாட்டு வண்டியாக தாளவாடி நேதாஜி சர்க்கிளை சேர்ந்த ராஜண்ணா என்பவரது 2 மாடுகள் சுமார் 5 லட்சத்திற்கு வாங்கி வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அபிஷேக பூஜைகளும் இரவு 6 மணிக்கு மலர் மற்றும் ஆபரணங்களுடன் அலங்கரித்து அம்மன் பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் அளித்தார். இரவு 9 மணி முதல் அலங்காரத்துடன் மேளதாள வாக்கியங்களுடன் காலை 5 மணி வரை அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
கர்நாடக இசை வீரேஸ்வர சுவாமி விருது பார்வதி குறவர் நடனம் மற்றும் மேளதாளங்களுடன் கார் ஈஸ்வர சுவாமி புஷ்ப பல்லாக்கு ஊர்வலம் நடைபெற்றது. மதியம் முதல் மாலை வரை அன்னதானம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த அன்னதான நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உணவு உண்டு சென்றனர்.
இரவு கரகாட்டம், மின்னலடி டிரம்ஸ், வீரபத்திர நடனம், இன்னிசை நிகழ்ச்சி, பூஜாநடனம், சண்டிமேளம், பொம்மையாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் மற்றும் வான வேடிக்கைகளுடன் உற்சாகமாக திருவிழா நடைபெற்றது.
காலையில் கோவில் மற்றும் மசூதி முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் தலைமை பூசாரி சிக்கூசு இறங்கவிருந்த நிலையில் நேதாஜி சர்க்கரை சேர்ந்த நவீன் என்ற இளைஞர் மீது அம்மன் இறங்கியதாக கூறி கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பூசாரி நவீன் குண்டம் இறங்கினார்.
இந்த குண்டம் திருவிழாவில் தலைமை பூசாரி மட்டுமே குண்டம் இறங்குவது பல ஆண்டுகளாக வழக்கமாக உள்ளது. மிக சிறப்பாக நடைபெற்ற திருவிழாவில் தமிழகம் மற்றும் கர்நாடகவை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.