துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பில் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிகழ்வை திரை கணினி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. தமிழக சட்டமன்ற கூட்டத்தில் 2025- 26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யும் நிகழ்வு மார்ச் 14 மற்றும் 15 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 14 ந் காலை 10மணி அளவில் தேதி தமிழக சட்டமன்ற கூட்டத்தில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை வாசித்தார்.இதை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் நேரடியாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிகழ்வை திரை காணொளி வாயிலாக பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் திரை கணினி அமைக்கப்பட்டுள்ளது.துறையூர் நகராட்சி சார்பில் பேருந்து நிலையத்தில் திரை கணினி மூலம் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.இதில் நகர மன்ற தலைவர் செல்வராணி மலர் மன்னன், நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா, உதவி பொறியாளர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் முரளி, மேற்பார்வையாளர்கள் மணிகண்டன், கோவிந்தராஜ் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் சுமதி மதியழகன்,கார்த்திகேயன், முத்து மாங்கனி பிரபு, பொது குழு உறுப்பினர் கிட்டப்பா மற்றும் பொதுமக்கள் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிகழ்வை திரை கணினியில் பார்த்து பாராட்டினர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்