கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மேலாண்மை துறை முதுகலை சார்பாக தேசிய அளவிலான கருத்தரங்கம்
பிரபல மகாராஷ்டிரா வணிகவியல் மற்றும் மேலாண்மை துறை சஞ்சீவனி பல்கலைகழகத்துடன் இணைந்து நடைபெற்ற இதில் இந்தியாவில் உள்ள பல்வேறு தொழில் முனைவு வாய்ப்புகள் குறித்து மதிப்புரை வழங்கப்பட்டது
கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மேலாண்மை துறை முதுகலை துறை மற்றும் மகாராஷ்டிரா சஞ்சீவனி பல்கலைகழகம் இணைந்து தேசிய அளவிலான கருத்தரங்கம் கல்லூரி அரங்கில் நடைபெற்றது..
மேலாண்மை துறை சார்ந்த மாணவர்கள் தொழில் முனைவோர்களாக மாறுவதில் உள்ள சவால்கள் குறித்து நடைபெற்ற இதில் பல்வேறு கல்லூரிகளில் இருந்தும் மேலாண்மை துறை சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்..
முன்னதாக நடைபெற்ற துவக்க விழாவில், இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் செயலர் திருமதி. சரஸ்வதி கண்ணையன் மற்றும் நிர்வாக செயலர் டாக்டர் பிரியா சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டு கருத்தரங்கை துவக்கி வைத்தனர்…
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் பொன்னுசாமி முன்னிலை வகித்தார்..
மேலாண்மை துறை தலைவர் சுதாகர் ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் துறை தலைவர் மேகா அனைவரையும் வரவேற்று பேசினார்.
கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக தொழில் வல்லுனர் ,மற்றும் கல்வியியல் ஆலோசகர் சந்திரசேகர் மேனன் கலந்து கருத்தரங்க மலரை வெளியிட்டார்..
தொடர்ந்து மாணவ,மாணவிகளிடையே பேசிய அவர்,
புதிய தொழில் முனைவோர்களாக மாறுவதில் உள்ள சவால்கள் மற்றும் கார்பரேட் நிறுவனங்களில் பணி புரிவது என இரு வேறு துறைகளில் உள்ள வேறுபாடுகள் குறித்து பேசினார்..
புதிய சிந்தனைகளை எளிதாக வெளிப்படுத்தினால் புதிய தொழில் முனைவார்கள் வெற்றி பெறுவது உறுதி என கூறினார்..
புதிய தொழில் முனைவோர்களுக்கு உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு நமது இந்தியாவில் வாய்ப்புகள் இப்போது ஏராளமானதாக இருப்பதாக கூறிய அவர் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதில்தான் வெற்றி இருப்பதாக தெரிவித்தார்..
தொடர்ந்து மாணவ,மாணவிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கப்பட்டது..
மேலாண்மை துறை இணை பேராசிரியர்கள் முனைவர் திலக் மற்றும் முனைவர் மல்லீஸ்வரி ஆகியோர் ஒருங்கிணைத்த இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மேலாண்மை துறை மாணவ,மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்…