துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள மதுராபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் 13- 03- 2025 அன்று மாலை 6 மணியளவில் பள்ளி ஆண்டு விழா மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவில் பள்ளி ஆசிரியைகள் வெண்ணிலா, காயத்ரி ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார்.பள்ளி தலைமை ஆசிரியை மு. சாமிக்கண்ணு ஆண்டறிக்கை வாசித்து தலைமை உரையாற்றினார்.
விழாவில் கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களின் விளையாட்டு திறமைகளை ஊக்குவித்து தமிழ் கலாச்சாரத்திற்கு மெருகேற்றி வரும் திருச்சி வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் செ.சுரேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இலக்கிய மன்ற போட்டி,உடற்றறிப் போட்டி விழா,கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு வெற்றி சான்றிதழ் மற்றும் வெற்றிக் கோப்பைகள் வழங்கி சிறப்பித்தார் இதில் பள்ளி ஆசிரியர்கள் சு.வெண்ணிலா,பெ.ஹேமலதா,
இரா.சாந்தி,வீ.ரமேஷ்,கா.கீதா,செ.காயத்ரி,ப.கவிதா,ச.விஜயலட்சுமி,ப.வைஜெயந்திமாலா,ர.தேவதர்ஷினி உள்ளிட்ட பள்ளி ஆசிரியைகளின் அற்புதமான பயிற்சியால் தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவிற்கு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக நடைபெற்றது.
இதில் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. இதில் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ மாணவிகள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் முன்னாள் வார்டு உறுப்பினர்கள் கபிலா உமாபதி,ஷேக்முகமது, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுபாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டு பள்ளி ஆண்டு விழாவை சிறப்பித்தனர்.விழா நிறைவில் ஆசிரியை கௌரி நன்றி உரையாற்றினார்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்