செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் கிராம நிர்வாக அலுவலர் பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் கேட்டதாக புகார் மனு வழங்கி செய்யூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டதால்
பரபரப்பு ஏற்பட்டது.
செய்யூர் கிராமத்தில் வசித்து வருபவர் கண்மணி இவர் தனது நிலத்திற்கு தவறுதலாக பட்டா என் மாறியுள்ளதால் அதனை உடனே மாற்றம் செய்து தரக் கோரி செய்யூர் கிராம நிர்வாக அலுவலர் ஜெகநாதனிடம் கடந்த 10.1.2025 அன்று புகார் மனு வழங்கினார்.
60 நாட்கள் கடந்து கிடப்பில் போடப்பட்ட மனு மீது இந்நாள் வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கண்மணி செய்யூர் தாலுகா அலுவலகம் சென்று துணை வட்டாட்சியரிடம் புகார் அளித்தார். புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.ஆகவே இது சம்பந்தமாக
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்
தா.பொன்னிவளவன் தலைமையில் செய்யூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டனர்
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. மேலும் இது குறித்து
மெத்தனமாக செயல்பட்ட கிராம நிர்வாக அலுவலர் ஜெகநாதன் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
குறிப்பாக பட்டா மாற்றம் செய்ய கட்டாய லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் மீது
லஞ்ச ஒழிப்பு துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.