கரூர் செய்தியாளர் மரியான் பாபு
மாபெரும் இலவச மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார்
அமைச்சர் செந்தில் பாலாஜி..
திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்-ன் 72வது பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் அப்பலோ மருத்துவமனை, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாமினை கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.
இம்முகாமில்இதயம், கண், நரம்பியல், நுரையீரல், பொது மருத்துவம், எலும்பு மற்றும் மூட்டு மாற்று சிகிச்சை, பெண்கள் மற்றும் மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நலம், காது மூக்கு தொண்டை சர்க்கரை மற்றும் சிறுநீர பிரச்சினை உள்ளவர்களுக்கு பரிசோதனையும், சிகிச்சையும், தகுந்த மருத்துவ ஆலோசனை, வழங்கி மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.
பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், இந்த மருத்துவ முகாமில் 65 டாக்டர்கள் 115 செவிலியர்கள் பங்கேற்று 1000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை, ஆலோசனைகளையும் வழங்கி உள்ளனர். முதல் கட்ட பரிசோதனை நடத்தி மருந்து மாத்திரை வழங்கப்பட்டுள்ளது. முழு பரிசோதனை தொடர் சிகிச்சை தேவைப்படுவோருக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும். தமிழக பட்ஜெட்டில் மகளிர்க்கு அதிக பயனுள்ள திட்டங்கள் இடம்பற்றுள்ளன.
கரூர் மாவட்டத்தில் பணிபுரியும் மகளிருக்கு அரசு தங்கும் விடுதி அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. அந்த விடுதியை கட்டுவதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது. கரூரில் தோழி மகளிர் தங்கும் விடுதி அனைத்து வசதிகளுடனும் கட்டப்பட இருக்கிறது. மேலும் திண்டுக்கல் சாலையில் புதிய சிட்கோ அமையும் என்ற அறிவிப்பும் உள்ளது. இதற்காக மாவட்ட மக்களின் சார்பில் முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார். இம்மு முகாமில் மேயர், துணை மேயர், மாமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.