தென்காசி மாவட்டத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க அமைச்சர் கோ.வி.செழியனிடம் பொ.சிவபத்மநாதன் கோரிக்கை
தென்காசி மாவட்டத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கோ.வி. செழியனை முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார்.
அந்த கோரிக்கை மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம் ஐந்து சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டமாகும்.
ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் ஒரு அரசு பாலிடெக்னிக் உள்ளது (ஐ ஆர் டி பாலிடெக்னிக்) தென்காசி மாவட்டம் தனியாக பிரிந்த நிலையில் தென்காசி மாவட்டத்தில் பல பாலிடெக்னிக் கல்லூரிகளை தனியார்கள் நடத்தி வருகிறார்கள் ஆனால் இதுவரை அரசு பாலிடெக்னிக் இல்லை.
தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர், போன்ற பகுதிகளில் அரசுக்கு சொந்தமான நிலங்கள் நிறையவே உள்ளது. வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மாணவ மாணவியர்கள் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் கட்டணம் செலுத்தி படிக்க மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.
ஏழை, எளிய, மக்களுக்கான ஆட்சியை தமிழகத்தில் தமிழ்நாடு முதல்வர் நடத்தி வருகிறார்.எனவே தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் எங்கள் தென்காசி மாவட்டத்தில் ஏழை, எளிய, நடுத்தர மாணவ மாணவிகளின் நலன் கருதி வருகிற நிதியாண்டிலேயே தென்காசி மாவட்டத்தில் அரசு பாலிடெக்னிக் அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை மனுவினை அமைச்சர் கோ.வி. செழியனிடம் வழங்கினார் மணுவினை பெற்றுக் கொண்ட அமைச்சர் கோ.வி.செழியன் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ. சிவபத்மநாதனுடன் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் சீவநல்லூர் கோ.சாமித்துரை உடன் இருந்தார்.