போடிநாயக்கனூர் கார்டமம் பிளா ன்டர்ஸ் அசோசிய சன் கல்லூரியில் கலை விழா
இந்த போட்டிகளில் பங்கேற்ற ஏல விவசாயிகள் என்ற கார்டமம் பிளான்டஸ் அசோசியேசன் கல்லூரி மாணவ மாணவிகள் பல்வேறு பரிசுகளை பெற்று சாதனை படைத்தனர் அவர்களுக்கான கௌரவிக்கும் மற்றும் ஊக்கப்படுத்தும் விதமாக கல்லூரி ஆடிட்டோரியத்தில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது
இந்த விழாவிற்கு கல்லூரியின் தலைவர் எஸ் வி சுப்பிரமணியன் தலைமை வகித்தார் கல்லூரி செயலாளர் மற்றும் தொடர்பு ஆர் புருஷோத்தமன் கல்லூரி முதல்வர் சிவக்குமார் நிர்வாக க்குழு உறுப்பினர்கள் சொரூபன் ராஜேந்திரன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
கல்லூரி பேராசிரியர் அலமேலு அனைவரையும் வரவேற்று பேசினார் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு அவர்களின் கல்வி கற்றலை அறியும் விதமாக பேச்சுத் திறன் எழுத்து கற்பனை நடிப்பு நடனம் உள்ளிட்ட போட்டிகளில் கல்லூரியை சார்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்
இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளின் திறமைகளை ஊக்கப்படுத்தும் வகையிலும் கலை விழாவில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கி பாராட்டி கல்லூரி தலைவர் செயலாளர் மற்றும் தொடர்பாளர் கல்லூரி முதல்வர் கல்லூரி இருபால் பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்தி பேசி சிறப்பு பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி ஒருங்கிணைப்பாளர்கள் மங்கை சிவா ஆகியோர் வெகு சிறப்பாக செய்து மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கல்லூரி அதிகாரிகள் ஊழியர்களை கனிவுடன் உபசரித்தனர் கல்லூரி கண்காணிப்பாளர் யுவராஜா நன்றி கூறினார்