மாதிரி நாகப்பட்டினம் வட்டார அளவிலான கூட்டமைப்பு தொலைநோக்கு பார்வை பயிற்சி தொகுதி – 2

நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் வட்டார அளவிலான கூட்டமைப்பு பயிற்சி நான்கு நாள் 13.03.2025 முதல் 16.03.25 வரை பாப்பா கோயில் ஊராட்சியில் கிராம சேவை மையம் அலுவலகத்தில் நடைப்பெற்றது.

நாகப்பட்டினம் மாதிரி வட்டார அளவிலான தொலை நோக்கு பார்வை பயிற்சி நடைப் பெற்றது. இதில் வட்டார ஒருங்கிணைப்பாளர் தங்கமணி தலைமையில் மகளிர் திட்ட மாவட்ட வள பயிற்றுநர் ஸ்ரீரங்கபாணி பயிற்சி அளித்தார் இதில் செயல்முறை விளக்கம், சுயஉதவிக் குழு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்பு நிர்வாகத்தை வலுப்படுத்துதல், தனி நபர் தேவை, குடும்ப தேவை (ம) கிராமத்தின் தேவை கொண்டு காரணிகள், 6 பரிமாணங்கள் கொண்டுள்ளது. கல்வி , சுகாதாரம், வாழ்வாதாரம், திறன் வளர்ப்பு, உட்கட்டமைப்பு, சமூக மேம்பாடு , போன்ற பரிமாணங்கள் கொண்டு 2025 – 2026 முன்னுரிமைப்படுத்தப்பட்ட காரணிகள் இலக்கு கொண்டு இந்த ஆண்டு உறுப்பினர்கள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் பற்றி BLF, PLF EC உறுப்பினர்களுக்கு மற்றும் சமுதாய சுய உதவிக்குழு பயிற்றுநர்கள் அல்லது சமுதாய வள பயிற்று நர்களுக்கு பயிற்சி நான்கு நாட்கள் வழங்கப்பட்டது.

செய்தியாளர் ஜி.சக்கரவர்த்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *