தாராபுரம் செய்தியாளர் பிரபு
9715328420
தாராபுரம் அருகே காட்டு நரி கடித்து 50-ஆயிரம் மதிப்புள்ள செம்மறி ஆடுகள் பலி விவசாயி சோகம்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்பளையம் பகுதியில் கொள்ளு காட்டு தோட்டத்தில் வசித்து வருபவர்
சுப்பன் மகன் கந்தசாமி வயது 44 இவர் தனது குத்தகைக்கு எடுத்த தோட்டத்தில் தனது பட்டியில் 20,க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலை வழக்கம்போல் பட்டிக்குள் 20-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு இரவு தனது வீட்டிற்கு வந்துவிட்டார்.
தொடர்ந்து இன்று காலை 10 மணி அளவில் செம்மறி ஆடுகளை மேய்ப்பதற்காக தனது பட்டிக்கு சென்று பார்க்கும் போது பட்டியின் அருகே காட்டு நரி ஒன்று படுத்திருந்தது அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த செங்குட்டுவன் ஆட்டு கொட்டகைக்கு சென்ற பார்த்தபோது அங்கு ரத்தம் சொட்ட சொட்ட ஆடுகள் துடிதுடிக்க ரத்த வெள்ளத்தில் 4-க்கு மேற்பட்ட ஆடுகளை வெறிநாய் கடித்து குதறி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார் உடனடியாக அருகில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிவிக்க அருகில் இருந்தவர்கள் உடனடியாக வந்து நரியை கல்லைக் கொண்டு துரத்தினர். இருப்பினும் நரி தப்பித்து ஓடி விட்டது இந்நிலையில் 8-க்கும் மேற்பட்ட ஆடுகளை வெறிநாய்கள் கிடைத்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது மேலும் இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்
தற்போது 50,ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செம்மறியாடுகளை காட்டு நரி கடித்து குதறியது வேதனைக்குரியது மேலும் தமிழக அரசு ஆடு மேய்க்கும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் இறந்த ஆடுகளைவனக்காப்பாளர் சுகன்யா, வனத்துறை அலுவலர் நாகராஜன், மற்றும் கால்நடை உதவி மருத்துவர் டாக்டர்:மோகன்ராஜ். இந்த ஆடுகளை நரிக்கடுத்து உள்ளனவா அல்லது வேறு ஏதாவது மற்மா விலங்குகள் கடித்துள்ளனவா? என குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.