கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்

கும்பகோணத்தில் தரைக்கடை, தள்ளுவண்டியில் வியாபாரம் செய்யும் பெண்களுக்கு வங்கிக் கடன் வழங்க வலியுறுத்தி இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மாநில தழுவிய ஆர்ப்பாட்டம்…
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்களை தடுத்திட வலியுறுத்தியும், பாலியல் குற்றங்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து நடத்தி குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வலியுறுத்தியும், தரைக்கடை தள்ளு வண்டியில் வியாபாரம் செய்யும் பெண்கள் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கி வங்கி கடன் உதவி வழங்க நடவடிக்கை எடுக்க கோரியும், மதுபான கடைகளை படிப்படியாக மூடி மருந்தில்லா தமிழகத்தை உருவாக்கிட வலியுறுத்தியும், தனியார் சிறுகுறு நிறுவனங்களில் பணிகளில் பெண்கள் நின்றபடி பணி செய்வது தடுத்து அவர்கள் பணிபுரிய நாற்காலி வழங்குவதை உறுதி செய்ய வலியுறுத்தியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாதர் தேசிய சம்மேளன மாவட்டத் தலைவர் கண்ணகி தலைமையில் கட்சி அலுவலகத்தில் இருந்து பேரணியாக தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்வம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி மாநில செயலாளர் தில்லைவனம், மாவட்ட செயலாளர் சரண்யா ஆகியோர் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்ட கண்டனமுழக்கமிட்டனர்.
இதில் மாவட்ட துணைச் செயலாளர் தாமரைச்செல்வி ,சந்திரா பிரியா, பரிமளா, கலைச்செல்வி ,ரேணுகா ஆகிய முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஆலிஸ்மேரி, நாகவள்ளி, நவசக்தி, துர்கா, மாலா, கலைச்செல்வி, லட்சுமி, விஜயலட்சுமி, மாரியம்மாள், அன்னபூரணி ,லதா, அஞ்சம்மாள் ,தெய்வ கன்னி,சங்கீதா, ராஜராஜேஸ்வரி, புஷ்பராணி ,சுந்தரி, மகாலட்சுமி ,வசந்தா, தனலட்சுமி ,பார்வதி, அறிவிச்செல்வி ,ராணி, வேலம்மாள் ,பார்கவி, கலைச்செல்வி ,கார்த்திகா, பூங்கொடி ,சகிலா பாய், இந்திராணி ,ராணி மற்றும் பலர் கலந்து கொண்டு கண்டனம் முழக்கமிட்டனர்.
முடிவில் மாநகரச் செயலாளர் கவிதா நன்றி கூறினார்.