அருந்ததியர்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனையில் தனியார் பள்ளி கழிவுநீர் திறந்து விடப்படுவதை தடுத்து நிறுத்த கோரி பொதுமக்கள் போராட்டம் .
விருத்தாசலம்
விருத்தாசலம் விருத்தாசலம் மேட்டு காலனி மகாத்மா காந்தி தெருவை சேர்ந்த அருந்ததியர் சமூக மக்களுக்கு கடந்த 23ஆம் ஆண்டு 184 மனை பட்டா அரசு வழங்கியது.
அப்போது அந்த இடத்தில் வீடு கட்டி குடியேற போதுமான பொருளாதாரம் இல்லாத சூழ்நிலையில் பயன்படுத்த முடியாமல் போனது. மேற்படி அருந்ததியர்களுக்கு ஒதுக்கப்பட்ட மனைகள் காலியாக கிடப்பதால் மனைக்கு அருகில் உள்ள தனியார் பள்ளியிலிருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த மனைப்பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக விடப்படுகிறது.
அதனால் இந்த இடம் சேரும் சகதியுமாக பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளது. இப்போது மக்கள் அந்த பகுதியில் வீடு கட்டி குடியேற விரும்புகின்றனர்.
ஆனால் சம்பந்தப்பட்ட பள்ளியின் கழிவுநீர் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் வீடு கட்டுவது சிரமமாக உள்ளதாக கூறி அப் பகுதி மக்கள் விசிக மாவட்ட செயலாளர் நிதி வள்ளல் தலைமையில், நகர செயலாளர் முருகன், ஒன்றிய பொருளாளர் சக்திவேல், அய்யாதுரை, மற்றும் அருந்ததியர் மக்கள் விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து விருத்தாசலம் தாசில்தார் உதயகுமார் சந்தித்து மனு கொடுத்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட தாசில்தார் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்