தேசிய மனித உரிமைகள் அமைப்பு மற்றும் சமூக நீதி அமைப்பின் துவக்க விழா
திண்டுக்கல்லில் தேசிய மனித உரிமைகள் அமைப்பு மற்றும் சமூக நீதி அமைப்பின் துவக்க விழா தனியார் விடுதியில் நடந்தது.
இதற்கு மாவட்டத் தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.மாவட்ட பொதுச் செயலாளர் அழகர்சாமி வரவேற்புரையாற்றினார்.இந்த நிகழ்ச்சியில் மாநில அமைப்பாளர் கலாராணி,இணைச் செயலாளர் காமாட்சி கண்ணன்,முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் சந்திரசேகரன், தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன், ரீடு டிரஸ்ட் அறக்கட்டளை இயக்குனர் ராஜசிம்மன்,மாநில நிர்வாகி ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் பிச்சை வேல் நிர்வாகிகளுக்கு அங்கீகார அடையாள அட்டை மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர் பாண்டி,மணிகண்டன்,அன்னபூரணி அறக்கட்டளை இயக்குனர் வேல் குமார்,மாவட்ட பொதுச் செயலாளர் ரவிக்குமார்,மாவட்டச் செயலாளர்கள் கண்ணன்,ஜான் பீட்டர்,முருகேசன், மாவட்ட சட்ட ஆலோசகர் கார்த்திகேயன், ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியராஜ், துணைச் செயலாளர்கள் குழந்தை ரோசரி ஜெகன், சக்திவேல், செயற்குழு உறுப்பினர்கள் கோபிநாத்கண்ணன், தினேஷ் பாபு,அரசி புட்ஸ் கயல்விழி, ஆதவன் மெடிக்கல் கவுதம் மற்றும் சொக்கலிங்கம், ரமேஷ் குமார், மகாமுனி,திராவிட ராணி,ராஜேஸ்வரி, சுடர்விழி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியராஜ் தொகுத்து வழங்கினார்.நிறைவாக மாவட்ட செயலாளர் டாக்டர் ஜெய வனிதாமணி நன்றி கூறினார்.