ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலிக்க “ஆயக்குடி மரத்தடி மையம்” கோரிக்கை!..

மத்திய அரசு கட்டாய கல்வி உரிமை சட்டத்தை கடந்த 2009 ல் கொண்டுவந்த பிறகு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடை நிலை ஆசிரியர்கள் நியமனத்துற்கு டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாக்கபட்டது.

தமிழகத்தில் 2012ம் ஆண்டு டெட் தேர்வு நடத்தபட்டது். இதுவரை 2012,2013,2014,2017,2022 என 7முறை மட்டுமே டெட் தேர்வு நடத்தபட்டுள்ளது.2014க்கு முன் டெட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் ஆசிரியர் பணி பெற்றனர்.

டெட் தேர்வு முறையில் பல மாற்றங்கள் நடந்த பின்னர் 2022 ல் நடத்தபட்ட டெட் தேர்வுக்கு இன்னும் பணி நியமனம் வழங்க பட வில்லை.இப்போது TRB வருடாந்திர தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. ஆனால் b.ed,D.ted.படிப்புகளை பெரிதும் மலை போல நம்பும் தேர்வர்களுக்கான டெட் குறித்த அறிவிப்பு இடம் பெறவில்லை. இதனால் b.ed பட்டதாரிகள் விரக்கதியில் உள்ளனர்.

எனவே ஆசிரியர் தேர்வு வாரியம் TNPSC போல ஆண்டு தோறும் டெட் தேர்வை நடத்த முன்வர வேண்டும்.அதே போல் தேர்வு முறையில் ஆண்டுக்கு ஒருமுறையை மட்டுமே பின் பற்ற பட வேண்டும்.ஆண்டுக்கு 2முறை டெட் தேர்வு என்ற விதி முறையை முறையாக பின் பற்ற பட வேண்டும்.டெட் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்ணை 82 லிருந்து 75 ஆக குறைத்தால் சிறப்பே! TNPSC போல ஆண்டு தோறும் டெட் தேர்வை நடத்தி அந்த ஆண்டிலேயே காலி இடங்களுக்கு ஏற்ப கல்வி ஆண்டில் பட்டதாரி,இடை நிலை ஆசிரியர்களை நியமனம் செய்ய TRB பரிசீலனை செய்ய வேண்டும் என ஆயக்குடி மரத்தடி மையம் சார்பில் வேண்டுகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *