கரூர் செய்தியாளர் மரியான் பாபு

கரூர் வாங்கலில் பெண்கள், குழந்தைகள் மீதானபாலியல் வன்கொடுமை எதிர்ப்பு விழிப்புணர்வு நாடகம்..
விழிப்புணர்வு நாடகத்தில் நடித்துக்காண்பிக்கும் சாக்சி தன்னார்வ குழுவினர்.
வாங்கலில் பெண்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.
தமிழக அரசின் சமூக நலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை, கைத்தறி, கைவினைப்பொருட்கள் ஜவுளி மற்றும் காகித துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, சாக்சி தொண்டு நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நாடகம் கரூர் அடுத்துள்ள வாங்கலில் நடைபெற்றது.
விழிப்புணர்வு நாடகத்திற்கு தொண்டு நிறுவன இயக்குநர் சுவேதா தலைமை வகித்தார். திட்ட மேலாளர் எம்.எஸ்.ஜெரால்டு வரவேற்றார். குழந்தைகள் நலக்குழு தலைவர் மணிமொழி ராஜேந்திரன், திட்ட நிர்வாக மேலாளர் லட்சுமி நாராயணன் மற்றும் நிர்வாகிகள் லோகநாதன், சிவா, ஜாஸ்மின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழிப்புணர்வு நாடகத்தை கரூர் மாவட்ட சமூக நல அலுவலர் சுவாதி மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எஸ்.பி.பிரியா ஆகியோர் துவக்கி வைத்து பேசினர். பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல், தடுப்பு உள்ளிட்டவை குறித்து சாக்சி தொண்டு நிறுவன தன்னார்வலர்கள் தத்ரூபமாக நடித்துக்காண்பித்தனர். இந்நிகழ்ச்சியில் ஊர்பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.