கோவையிலிருந்து பெங்களூரு செல்லும் உதய் விரைவு ரயிலை பொள்ளாச்சி வழியாக இயக்க பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை.

பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி மத்திய ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை டில்லியில் நேரில் சந்தித்தார். அப்போது கோவை – பெங்களூரு உதய் இரண்டு அடுக்கு தினசரி ரயிலை பொள்ளாச்சி வழியாக நீட்டிக்க ரயில்வே வாரியம் விரைவாக ஒப்புதல் கொடுத்து பொள்ளாச்சி வழியாக இயக்க வேண்டும் எனவும்
பொள்ளாச்சி – சென்னை இடையே கிணத்துக்கடவு, கோவை, ஈரோடு, சேலம், காட்பாடி, அரக்கோணம் வழியாக நேரடி இரவு நேர விரைவு ரயில் இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து மனு அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *