தாராபுரம் செய்தியாளர் செல்:9715328420
தாராபுரத்தில் பா.ஜனதா பிரமுகரின் பேக்கரியில் 10, ஆயிரம் பணம் திருடிய வாலிபரின் சிசிடிவி காட்சி வெளியீடு!
திருப்பூர் மாவட்டம்
தாராபுரத்தில் பையாஸ் சாலையில் பா.ஜனதா பிரமுகர் கொங்கு ரமேஷ் என்பவர் நடத்தி வரும் பேக்கரியுடன் கூடிய ஓட்டலுக்குள் அதிகாவையில் நுழைந்த வாலிபர் கல்லாப்பெட்டியை திறந்து ரூ.10 ஆயிரத்தை திருடிச்சென்றார்.
இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வாலிபரை போலிசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.இது பற்றி போலீஸ் நரப்பில் கூறப்படுவதாவது.
பேக்கரியில் பணம் திருட்டு தாராபுரம்- ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலையில் பேக்கரியுடன் கூடிய இரவு நேர உணவகம் செயல்பட்டு வருகிறது.இதை நகர பா.ஜனதா கட்சி நிர்வாகிகளில் ஒருவரான கொங்கு ரமேஷ் (வயது 35), என்பவர் பங்குதாரராக இருந்து நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் வழக்கம்போல இரவு 11 மணிக்கு கடையின் முன் பகுதியை தார்ப்பாய் படுதாவால் கட்டி மூடிவிட்டு ஊழியர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர்.
வழக்கமாக கடையில் இரவு நேரம் தங்கும் ஊழியர் சம்பவத்தின் போது விடுமுறை எடுத்துக்கொண்டு சென்று விட்டார்.அதிகாலை 2 மணி அளவில் கடையின் நார்ப்பாய் படுதாவை நிறந்து கொண்டு கல்லூரி மாணயரை போல தோற்றம் கொண்ட ஒரு மர்ம வாலிபர் கடைக்குள் நுழைந்து கல்லாப்பெட்டியை திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த ரொக்கம் ரூ.10. ஆயிரத்தை திருடிக் கொண்டு தைசாக கடையை விட்டு வெளியேறியது
அங்கு.பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் தெளிவாரப் பதிவாகியுள்ளது.
வழக்கம்போல் காலையில் கடையை திறந்த ஊழியர்களுக்கு கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பணம் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை சோதனை செய்த போது இரவு 2.11 மணி அளவில் மர்ம வாலிபர் கடைக்குள் நுழைந்து கல்லாப்பெட் டியில் இருந்த பணத்தை திருடிச் செல்வது தெரிந்தது.
சம்பவம் குறித்து தாராபுரம் போலிசில ரமேஷ் அரித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து மர்ம வாலிபரை தேடி வருகின்றனர்.
வாலிபர் கடையில் நுழைந்து பணத்தைத் திருடும் சிசிடிவி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.