செய்தியாளர் பிரபு செல்:9715328420
குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த சிவானந்தன் என்பவரது மகன் தனியார் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்த முருகேசன் வயது 35 என்பவர் கடந்த 24.1. 2018 ஆம் தேதி தாராபுரம் டு திருப்பூர் பைபாஸ் ரோட்டில் தாராபுரம் விநாயகா ஹாலோ பிளாக் அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது மதுரையில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு பேருந்து அவருக்கு பின்னால் மோதி விபத்து ஏற்பட்டதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்தில் இறந்து விட்டார், இந்த விபத்து குறித்து தாராபுரம் காவல் துறையினர் அரசு பேருந்து ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்,
இதற்கிடையில் விபத்தில் இறந்து போன முருகேசன் அவர்களின் தாயார் செல்வி தகப்பனார் சிவானந்தன் இருவரும் தாராபுரம் மாவட்ட கூடுதல் அமர்வுகள் நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு கோரி மனுதாக்கல் செய்திருந்தனர் மனுவை விசாரித்த தாராபுரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் கடந்த 1.3.2023 ஆம் தேதி பிறப்பித்து உத்தரவில் நஷ்ட ஈட்டு தொகை 11 லட்சத்து 96 ஆயிரத்து அரசு போக்குவரத்து கழகம் வழங்க உத்தரவிட்டது, உத்தரவு தொகையை உரிய காலத்தில் செலுத்தாததால் வட்டி செலவு தொகை சேர்த்து முழு தொகை பதினாறு லட்சத்து 89 ஆயிரத்து 599 செலுத்துக்கோரி நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர்,
நிறைவேற்று மனுவை விசாரித்த தாராபுரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சரவணன் அவர்கள் பிறப்பித்த உத்தரவில் திருப்பூர் செல்வதற்காக தாராபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கு பகல் சுமார் 1.20 மணிக்கு வந்தடையும் அரசு பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்
பாதிக்கப்பட்ட முருகேசன் அவர்களின் குடும்பத்திற்காக தாராபுரம் வழக்கறிஞர் எஸ்.டி.சேகர் அவர்கள் ஆஜராகி வழக்கு நடத்தி வந்தார், நீதிமன்ற உத்தரவின்படி நீதிமன்ற அமீனா அரசு பேருந்தை ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தார் இதனால் தாராபுரம் புதிய பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.