செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பூத் கமிட்டி படிவம் சரிப்பாக்கும் பணி நடைபெற்றது.
செய்யூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சித்தாமூர் மேற்கு ஒன்றியம் சோத்துப்பாக்கம் மேல்மருவத்தூர் பொறையூர் மழுவங்கரணை கீழ்மருவத்தூர் அமணம்பாக்கம் அரப்பேடு கொளத்தூர் புளியனி உள்ளிட்ட பகுதிகளில் பூத் கமிட்டி நிர்வாகிகள் அமைக்கும் பணி சித்தாமூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பூபதி,காஞ்சிபுரம் மண்டலம் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு சோத்துப்பாக்கம் ச.ராஜசேகர்
ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளருமான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி பொறுப்பாளர்களை நேரில் சந்தித்து படிவத்தை ஆய்வு செய்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் பக்தாசலம்
சோத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீதரன் ஒன்றிய மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் சேவல் ச.இராம்பிரசாத் பாசறை மாவட்ட துணை தலைவர் அமணம்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அ.கு.இராமச்சந்திரன்
மற்றும் கிளை கழக நிர்வாகிகள் முத்துலிங்கம் சிவா விநாயகம் தனசேகர் பாக்கியராஜ் முருகேசன் குப்பன் அரப்பேடு மூர்த்தி மணி உள்ளிட்ட மகளிர் அணியினர்
அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.