தாராபுரத்தில் கடந்த இரண்டு நாட்களாக திடீர் திடீர் என மர்ம வெடிச் சத்தம் கேட்டதால் தாராபுரம் சுற்றுவட்டார 50- கிலோ மீட்டர் தூர கிராமங்களில் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்,மூலனூர், குண்டடம், தளவாய் பட்டிணம், கோவிந்தாபுரம், கொளத்துப்பாளையம், ஊதியூர், கொங்குர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக திடீர் திடீர் என மர்ம வெடிச் சத்தம் கேட்டதால் தாராபுரம் சுற்றுவட்டார 50- கிலோ மீட்டர் தூர கிராமங்களில் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஊரையே குலுக்கும் அதி பயங்கர வெடி சத்தம் வந்தது இந்த சத்தமானது சுமார் 50-கிலோமீட்டர் தொலைவிலுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்த வெடி சத்தத்தை உணர்ந்து அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த திடீர் மர்ம வெளிச்சத்தம் ஆண்டிற்கு ஒரு முறை அல்லது இருமுறை என வெடித்துக் கேட்டுக்கொண்டே வந்துள்ளது. தற்பொழுது இந்த 2025 ஆம் ஆண்டு தொடர்ந்து நான்கு முறை வெடிச்சத்தான் வந்துள்ளது. அதில் குறிப்பாக தற்போது ஒரு நாள் விட்டு ஒரு நாள் என தொடர்ந்து வெடிச்சத்தம் கேட்டுள்ளது இதனால் மூலனூர் பகுதியில் டைல்ஸ் கடை ஒன்றில் டைல்ஸ்கள் உடைந்து சேதமடைந்தது மேலும் வீடுகளின் கதவுகள் கண்ணாடி ஜன்னல்கள் பழங்கால சுவர்கள் இடிந்தன இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பெரும் பீதி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் மற்றும் வருவாய்த் துறையினரிடம் கேட்டபொழுது என்ன என்பது தற்பொழுது தெரியவில்லை இது குறித்து நாங்கள் ஆய்வு மேற்கொள்கிறோம் என தெரிவித்தனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில் சூப்பர் சோனிக் என்ற விமானத்தின் மூலமாக அதி பயங்கர உந்துதலுக்கு விமானம் செல்லும் பொழுது ஏற்படும் வெடிச்ச சத்தமாக இருக்கும் எனவும் அல்லது கல் குவாரிகளில் நிலத்தில் 500 அடிக்கு மேல் துளையிட்டு பாறைகளை வெட்டி எடுக்கும் பொழுது ஏற்படும் சத்தமாக இது இருக்கும் எனவும் பல்வேறு கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் தாராபுரம் பகுதியில் மர்மமான முறையில் ஹெலிகாப்டர் ஒன்று தாழ்வாக பறந்து சென்றது இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *