தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் வேலை வாய்ப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் கல்லூரி நிறுவனச் செயலர் கம்பம் என் ராமகிருஷ்ணன் எம் எல் ஏ கல்லூரி இணைச் செயலாளர் என்.எம்.ஆர். வசந்தன் கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் மற்றும் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் நடைபெற்றது துணை முதல்வர் டாக்டர் வி வாணி முன்னிலை வகித்தார் கல்வி நிறுவனத்தின் pvt Ltd சார்பில் 12க்கும் மேற்பட்ட தனியார் தொழில்துறை நிறுவனங்கள் வேலை வாய்ப்பு முகாமை நடத்தினர்
இந்த முகாமில் பெரியகுளம் திரவியம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டிபட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர் முகாமில் அனைத்துத் துறை சார்ந்த மூன்றாம் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு பயிலும் மாணவிகள் பங்கு பெற்றனர்
71 மாணவிகள் நேர்காணலில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பிற்கு தேர்வு செய்யப்பட்டார்கள் இந்த முகாமில் கல்லூரி வேலைவாய்ப்பு பிரிவு உறுப்பினர்கள் எஸ் பத்மபிரியா கே ஆர்த்தி டாக்டர் டி. சுபாஷினி ஏ பூங்குழலி டாக்டர் சுஜிதா பர்வீன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். இந்த முகாமில் 71 மாணவிகள் வேலைவாய்ப்பு பெற்று பயன் பெற்றனர்