இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலமடை கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டாம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர், மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் மாணவ, மாணவிகள், மற்றும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு பாலியல் விழிப்புணர்வு குறித்து அப்துல் கலாம் அறக்கட்டளை நிறுவனர் கலாம் விக்னேஷ் கலந்து கொண்டு உரையாற்றினார்