பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்

பாபநாசம் அருகே பசுபதிகோவிலில் 100நாள் வேலைத் திட்டத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசு தரவேண்டிய ரூ.4034 கோடி நிதியை மத்திய அரசு வழங்கக்கோரி தஞ்சை வடக்கு மாவட்ட தெற்கு ஒன்றியம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…
பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்……
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பசுபதிகோவிலில் 100நாள் வேலைத் திட்டத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசு தரவேண்டிய ரூ.4034 கோடி நிதியை வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ச்சியாக வஞ்சித்து வரும் ஒன்றிய பாசிச பாஜக அரசைக் கண்டித்து தஞ்சை வடக்கு மாவட்டம் பாபநாசம் தெற்கு ஒன்றியம் சார்பில் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் ரேவதிநடராஜன்,ஒன்றிய கழக அவைத் தலைவர் மணி, மாவட்ட பிரதிநிதி ராம பிரபு, பேரூர் கழக செயலாளர் கபிலன், மணிமாறன், தமிழ்வாணன், ஜெயந்தி ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினர்.
இதில் பாபநாசம் தெற்கு ஒன்றிய மாவட்ட ஒன்றிய பேரூர் மற்றும் பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கண்டன வாசகம் எழுதிய பதாகைகளை கைகளில் ஏந்தி கண்டன முழக்கமிட்டனர்.