திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில் குமார்,
திருவாரூர்
திருவாரூர் வைர விழா கண்ட ராஜ குலத்தோர் மகா சங்கத்தின் மாதாந்திர கூட்டம் சங்க செயல் தலைவர் S. முத்தையன் அவர்கள் தலைமையில் திருவாரூர் 21, கீழ சன்னதி தெருவில் உள்ள சங்க கட்டிடத்தில் காலை 10 மணிக்கு நடைபெற்றது, சங்கத்தினுடைய பொதுச் செயலாளர், ஆற்றல்மிகு,R,குழந்தைவேலு அவர்கள் முன்னிலை வகித்தார்கள், பொறுப்பாளர்கள் சங்க துணை தலைவர்கள், M,ஈஸ்வரன்
V. செந்தில்குமார் துணைச் செயலாளர்கள் P, செல்வராஜ் V. சுப்பிரமணியன்
M,கண்ணன் P, முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்,திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு, ராஜகுல என்று ஜாதி சான்றிதழ் வழங்க அனைத்து வட்டாட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பிய மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது,
எதிர்வரும் 07-04-2025 அன்று நடைபெற இருக்கின்ற,உலக புகழ் பெற்ற ஆழி தேர் விழாவில் காண வரும் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்குவதென்ன முடிவு செய்யப்பட்டது, எதிர்வரும் தொழிலாளர்கள் தினமான மே தினத்தன்று உறுப்பினர்களுக்கு விருந்துடன் கூடிய கொடியேற்ற விழா சிறப்பாக நடத்துவது, வைர விழா கண்ட ராஜகுலத்தோர் மகா சங்கமும், திருக்குறிப்புத் தொண்டர் சமூக பேரவையும், இணைந்து நடத்தும், மாபெரும் சுயவரம் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது, போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, சங்கத்தின் ஏராளமான
செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள், சங்கத்தின்டைய பொருளாளர் J. நடராஜன் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது,