வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் பங்குனி பெரும் திருவிழாவில் பனிரெண்டாம் நாள் விழாவில் சிறப்பு அபிஷேகம், நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை பங்குனி பாடைக்காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இவ்வாண்டு கடந்த 23ஆம் தேதி பாடைக்காவடி பெருந்திருவிழா நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பனிரெண்டாம் நாள் விழாவில் மதியம் 12 மணி அளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், தீபாதாரணையும் நடைபெற்று பக்தர்களுக்கு அருட்பிர சாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
மாலை 7 மணி அளவில் நாடும் வீடும் நலமாய் வளர பெரிதும் தேவை ஆண்களின் உழைப்பா? பெண்களின் பொறுப்பா? என்ற தலைப்பில் நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திரைப்பட பாடல் ஆசிரியர், ராஜ் டிவி அகட விகட நடுவர் கலைமாமணி நாகை நாகராஜன் நடுவராக கொண்டு நடைபெற்றது.
அபிஷேக ஆராதனை மற்றும் நிகழ்ச்சியை தொழுவூர் தெய்வத்திரு கணேசன் குமாரர்கள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் க. செல்வம் & சகோதரர்கள், வலங்கைமான் ஸ்ரீ ரமேஷ் டிராவல்ஸ், முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் சுமதி செல்வம் சிறப்பாக செய்து இருந்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வலங்கைமான் பேரூர் திமுக அவைத்தலைவர் சோம.மாணிக்கவாசகம் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.