தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் 5.95 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட விளையாட்டு அரங்கை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இருந்து தேனி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ரூபாய் 5.95 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பல்நோக்கு விளையாட்டு அரங்கினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் புதிதாக கட்டப்பட்ட பல்நோக்கு விளையாட்டு அரங்கில் குத்துவிளக்கு ஏற்றியும் அங்குள்ள கிரிக்கெட் மைதானத்தில் விளையாட்டு வீராங்கனைகளுடன் கிரிக்கெட் விளையாடும் விளையாட்டு வீராங்கனைகளின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் மேலும் விளையாட்டு வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் விதமாக விளையாட்டு குறித்த பல்வேறு கருத்துக்களை பேசி விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தினார்
இந்த நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ. மகாராஜன் தேனி நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணுப் பிரியா பாலமுருகன் திட்டக்குழு உறுப்பினர் நாராயண பாண்டியன் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார் நகராட்சி நகர் மன்ற துணைத் தலைவர் செல்வம் உள்ளிட்ட விளையாட்டு வீரர் வீராங்கனைகள் பலர் கலந்து கொண்டனர்