கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள முருகாளி எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளியின் ஆண்டுவிழா பள்ளியின் தலைமையில் பள்ளி ஆசிரியை ஆனந்தகுமாரி முன்னிலையில் மிக சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியை வித்யா மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த நிலையில் விழாவின் சிறப்பு விருந்தினராக நகராட்சி நகர் மன்ற உறுப்பினர் உறுப்பினர் கலாராணி கலந்து கொண்டு சிறப்பித்தார் விழா முடிவில் நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது வெகு சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் பள்ளி மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர்களும், ஊர் பொது மக்களும் திரளாகக்கலந்து கொண்டு சிறப்பித்தனர்