கோவையில் நடைபெற்ற அனைத்து மகளிர் சங்கமம் நிகழ்ச்சியில் சாதனை பெண்கள் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர் அகில பாரத பிராமணர் சங்கம் சார்பாக அனைத்து மகளிர் சங்கமம் எனும் மகளிர் தின விழா வெகு விமரிசையாக நடைபெற்றது..

கோவை . வடவள்ளி சக்தி காமாட்சி அம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற்ற இதில்,முன்னதாக சங்கத்தின் கொடியை தேசிய தலைவர் குளத்துமணி ஐயர் ஏற்றி வைத்தார் தொடர்ந்து நிகழ்ச்சியில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்று கொண்டனர்..

பின்னர் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி குறித்து மாநில நிர்வாகிகள் சிறப்புரை ஆற்றினர் இதில்,தேசிய பொது செயலாளர் ராமசுந்தரம்,மூத்த துணைத்தலைவர்கள் நடராஜ ஐயர்,முத்துராமன்,மாநில மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் சித்ரா,மாநில துணைத்தலைவர் மாதவன்,வாசன் கண் மருத்துவமனை மருத்துவர் அனுஷா வெங்கட்ராமன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் சிறப்புரை ஆற்றினர்…

விழாவின் ஒரு பகுதியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாசன் கண் மருத்துவமனை சார்பாக கண் மருத்துவ முகாம் நடைபெற்றது..

தொடர்ந்து,சாதனை பெண்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது..
நிகழ்ச்சியில் நடனம், பாடல் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *