திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம், K.C. பட்டி பஞ்சாயத்து – குறவனாச்சி ஓடை பழங்குடியினர் கிராமத்தில் தமிழக அரசின் பழங்குடியினர் நலத்துறை மூலமாக வீடற்ற பழங்குடியினருக்கு வீடு கட்டும் திட்டம் கீழ் சுமார் 5 இலட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 17 வீடுகள் கட்டுவதற்கான ஆணை ,உலக பழங்குடியினர் தின விழாவில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவரது ஆணையின் பேரில் மாண்புமிகு முன்னாள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்.கயல்விழி செல்வராஜ் தலைமையில் , மாண்புமிகு பழனி சட்டமன்ற உறுப்பினர்.ஐ.பி.செந்தில் குமார், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர்.சத்திதானந்தம் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மை செயலர். இலட்சுமிபிரியா இ.ஆ.ப. பழங்குடியினர் நலத்துறை இயக்குனர். அண்ணாத்துரையால் வழங்கப்பட்டு,தாட்கோ வழியாக வீடு கட்டும் பணிகளும் தொடங்கப்பட்டது.
சில காரணங்களால் பணிகள், கட்டுமானப் பொருட்கள் பிரச்சினை இருந்தது. இதனை தமிழ்நாடு பழங்குடியினர் நலத்துறை இயக்குனர். அண்ணாதுரை அவரது கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் உடனடியாக பேசி, நடவடிக்கை எடுத்தார்.
அதனடிப்படையில் கட்டுமானப் பொருட்கள் மற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இதற்காக தமிழக அரசு பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் குறவனாச்சி ஓடை பழங்குடியின மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.