கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.

மதுரையைச் சேர்ந்தவர் வினோத்குமார் 40 இவரது குடும்பத்தினர் மதுரையில் உள்ள நிலையில் இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பாச்சான் காட்டு பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் டையிங் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் வினோத் குமார் நேற்று இரவு வேலையை முடித்துவிட்டு தங்கி இருக்கும் அறைக்குச் சென்றுள்ளார் அப்போது பெய்த கனமழை மற்றும் சூறைக்காற்றின் காரணமாக மின் கம்பி அறுந்து தொங்கி கிடந்ததாக கூறப்படுகிறது.

அதனை சிறிதும் கவலைக்காமல் வினோத்குமார் எதிர்பாராத விதமாக மின்கம்பியை மிதித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்த அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று உயிரிழந்த வினோத்குமாரின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *