தென்காசி காசிவிஸ்வநாதர் திருக்கோவிலில் ஆலய குடமுழுக்கு பெருவிழாவை நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழில் நடத்திடவும் நீதிமன்ற ஆணையை அமல்படுத்தாத குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா தொடர்பாக
அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிய பொழுது அதிகாரிகளை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து சத்தியபாமா அறக்கட்டளை தமிழ் வேத ஆகம பயிற்சி பாடசாலை நிறுவனத் தலைவி சத்தியபாமா தலைமையில் 4 சிவனடியார்கள் ராஜேந்திரன், தங்கவேலு, தமிழ்மணி, உட்பட நான்கு பேர்கள் கடையநல்லூரில் இரவு தங்கி இருந்த நிலையில் தமிழில் குடமுழுக்கு நடத்த வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய திட்டமிட்ட தகவல் காவல்துறைக்கு கிடைத்ததின் அடிப்படையில் புளியங்குடி டிஎஸ்பி மீனாட்சி நாதன் தலைமையிலான போலீசார் நான்கு பேரையும் கைது செய்து கடையநல்லூர் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *