கே. தாமோதரன், பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.
குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள தனியார் தொழிற்சாலையின் காற்று மற்றும் ஒளி மாசு ஏற்படுவதாக கூறி முக கவசம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு……….
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அண்ணா நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் தனியார் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகை மற்றும் ஒளியின் காரணமாக அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் ஒலியின் சத்தம் அதிகம் இருப்பதால் நில அதிர்வு ஏற்படுவது போல தாங்கள் உணருவதாகவும் வீட்டுக்குள் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த தொழிற்சாலையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று ஒன்று திரண்டு முக கவசம் அணியும் நூதன போராட்டம் நடத்தினர். தொடர்ந்த அங்கு வந்த பல்லடம் போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.