தேனி மாவட்ட இலவம் பஞ்சு விளை பொருளை ஒழுங்கு முறை விற்பனை கிட்டங்கிகளில் இருப்பு வைத்து விவசாயிகள் பயனடையலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் தேனி மாவட்டம் கடமலை மயிலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இலவம்பஞ்சு பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு தற்போது அறுவடை காலமாக உள்ளதால் இலவம் பஞ்சு விளைவிக்கும் விவசாயிகள் தங்களது விளை பொருளை அறுவடை செய்து விற்பனை செய்யும் சமயங்களில் உரிய விலை கிடைக்காத பட்சத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையை சார்ந்த தேனி விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் கீழ் செயல்படும் தேனி கம்பம் சின்னமனூர் போடிநாயக்கனூர் ஆண்டிபட்டி தங்கம்மாள்புரம் ஆகிய ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் உள்ள கிட்டங்கிகளில் இருப்பு வைத்து விளை பொருளின் மதிப்பில் 50% முதல் 75% வரையிலும் அதிகபட்சமாக 5 லட்ச ரூபாய் வரையிலும் 5 % வட்டியில் பொருளீட்டுக் கடன் பெற்று பயனடையலாம் விலைக்குறைவான காலங்களில் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் உள்ள கிட்டங்கிகளில் வாடகைக்கு இருப்பு வைத்து விலை அதிகரிக்கும் சமயங்களில் அதனை விற்று பயன் பெறுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.மேலும் விவசாயிகள் தங்களது வேளாண் விலை பொருட்களை தேனி கம்பம் சின்னமனூர் போடிநாயக்கனூர் ஆகிய ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் செயல்படுத்தப்படும் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் நாம் மூலம் நல்ல விலைக்கு விற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார் இந்த தகவலை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் இரா நல்லதம்பி தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *