பெண்ணாடம் பகுதியை சார்ந்த தமிழறிஞர் புலவர் கு.கலியபெருமாள் மகன் க.சோழநம்பியார் அவர்கள் உறவினர்களின் முழு ஒப்புதல் பெற்று முழு உடலுறுப்பு தானத்தை புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து முன்னிலையில் புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி இயக்குநர் சி.உதயகுமார் அவர்களிடம் வழங்கினார்.உடன் நூலகர் ஷீபா, செவிலியர் கல்லூரி துணை முதல்வர் திரு.கணேஷ் ஆகியோர் உள்ளனர்.