பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே திருக்கருக்காவூர் தனியார் பள்ளியில் முப்பெரும் விழா கோலாகலமாக கொண்டாட்டம்….
கிராம புற தனியார் பள்ளிகளுக்கு கூடுதல் நிதி உதவி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் எனசென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் பேச்சு….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருக்கருக்காவூரில் உள்ள சோழன் மழலையர் மற்றும் தொடக்க பள்ளி ஆண்டு விழா,நம்மாழ்வார் விருது என முப்பெரும் விழா பள்ளி தாளாளர் சிவ.சண்முகம் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், தமிழ்நாடு பார்கவுனசில் கார்த்திக்கேயன் , ஆகியோர் கலந்து கொண்டு விருதுகள் வழங்கிச் சிறப்புரையாற்றி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.
மேலும் மாணவ மாணவிகள் கோலாட்டம் , சிலம்பாட்டம் ,பல்வேறு வேடங்களில் நடனம் ஆடி கண் தவறும் வகையில் மழலை குழந்தைகள் அசத்தினர்.
இந்நிகழ்ச்சியில் நீலகண்டன் , கார்த்திகேயன்,மணி.மாறன் , ரெங்கராசன்,கீதா பிரியதர்ஷினி, அரவிந்தன்,செழியன், ஆனந்த் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.