கோவை சுந்தராபுரம் மக்கா மஸ்ஜித் மதரஸா மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகமது ரபி வழங்கினார்..
கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள மக்கா மஸ்ஜித் மதரஸாவில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா மக்கா மஸ்ஜித் பள்ளி வாசல் நிர்வாகம் சார்பாக நடைபெற்றது..
நிர்வாக தலைவர் ஹாரூன் ரஷீத் தலைமையில் நடைபெற்ற இதில்,செயலாளர் இத்ரீஸ்,பள்ளிவாசல் இமாம் அப்துல்லா மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்..
உயர் மட்ட குழு உறுப்பினர் அப்துல்லா அறிமுக உரையாற்றினார்..
இதில் சிறப்பு விருந்தினராக தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகமது ரஃபி கலந்து கொண்டு மதரஸாவில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு மிதி வண்டிகள் மற்றும் சிறப்பு பரிசுகளை வழங்கி பேசினார்..
அப்போது பேசிய அவர்,இஸ்லாம் மார்க்கம் அனைவரும் கல்வி பயில்வதை அவசியமாக வலியுறுத்துவதாக தெரிவித்தார்…
மேலும் பெற்றோர்களை மதிப்பவர்கள் மட்டுமே வாழ்வில் முன்னேற்றங்களை பெற முடியும் என கூறிய அவர்,இஸ்லாமிய மார்க்க கல்வி இது போன்ற வாழ்வியல் ஒழுக்கங்களை கற்று தருவதாக கூறினார்..
இந்நிகழ்ச்சியில் பல்சமய நல்லுறவு இயக்க பல்வேறு நிலை நிர்வாகிகள் அபுதாகீர்,வழக்கறிஞர் இஸ்மாயில்,சீனிவாசன்,ஏர்டெல் அபுதாகீர்,முகம்மது அலி,டிஸ்கோ காஜா,காமராஜ்,கோவை தல்ஹா,சிவநேசன்,லெனின்,அசார்,உட்பட பலர் கலந்து கொண்டனர்..