புதியதாக சேர்ந்த மாணவர்களுக்கு கிரீடத்துடன் வரவேற்பு இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியான கௌரவ தொடக்கப்பள்ளியில் புதிதாக ஒன்றாம் வகுப்பு சேரும் மாணவர்களை கிரீடம் மற்றும் சால்வை அணிவிக்கப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டு ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாக குழு சார்பாக வரவேற்கப்பட்டது
இதில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது நிகழ்ச்சியில் பெற்றோர்கள் கலந்து கொண்டு உற்சாகமடைந்தனர் இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைவர் நாகராஜன் செயலாளர் நாகக்குமார் பொருளாளர் ஞானஜெயகுரு மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் துணை ஆசிரியர்கள் கௌரவ உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து வாழ்த்துக்களை கூறினார்கள்